Thursday, February 09, 2012

சில்லரை வணிகம்-அப்படின்னா என்ன?


சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு! இன்று இந்திய எல்லைக்குள் ஒரு உள் நாட்டு கழகத்தையே ஏற்படுத்தி இருக்கும் விடயம். இதில் அப்படி என்னதான் இருக்கு? கொஞ்சம் பார்ப்போம்.
முதலில் சில்லரை வணிகம் அப்டின்னா என்ன?
அதான் பேருலயே இருக்கே,அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள்,மொத்தமா கொள்முதல் செய்து வைக்க முடியாம அப்ப அப்ப வாங்க கூடிய பொருட்களுக்கான சந்தை.

அட,நம்ம மளிகை கடை இதுக்கா இத்தனை அக்கப்போரு,கொஞ்சம் பெரிய மளிகைகடை சுத்தமா,சுகாதாரமா வெளிநாட்டுகாரன் திறப்பான் அவ்ளோதானே, இதுக்கு ஏன்பா தடை போடுறீங்க? சரி இந்த மளிகைகடை திறக்க வெளிநாட்டுக்காரன் ஏன் இங்க வாரான்? கார்,கம்பூயட்டர் விக்க வந்தா அர்த்தமிருக்கு புதுசு புதுசா கண்டுபிடிப்பான்,நம்மகிட்ட இருக்காது,விற்கலாம். உப்பு,புளி மிளகாய் வியாபாரத்தில என்னய்யா புதுசா கொண்டு வருவான்,அதுமட்டுமில்லாமா இதயெல்லாம் அங்க உற்பத்தி செய்து தூக்கீட்டா வர முடியும்,கெட்டுபோகாது? ஆக இங்கயே வாங்கி இங்கயே விற்கப்போகிறான். ஆனா ஏன் இவ்ளோ பணம் போடுறான்? எதுக்கு? எப்படியோ நமக்கு தரமான சரக்கு கிடைக்கும்,விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும்.
இதுதான் பொது பார்வை, இப்ப ஒவ்வொரு பக்கமா ஊடுறுவி அலசுவோமா?
முதல்ல இந்திய நுகர்வு சங்கிலி எப்படி? பார்ப்போம். எந்த ஒரு பொருளும் மூன்று வித மனிதர்களை கடந்தே நம்ம கைக்கு வருது.யாரு அவுங்க?

1.உற்பத்தியாளர்
2.இடைத்தரகர்
3.விற்பனையாளர்
நாலாவது நாம,அதாங்க நுகர்வோர்.
இந்த மூன்று பேருமே அவுங்க சக்திக்கேற்ப்ப பெரு/நடு/குறு அப்படின்னு பல பிரிவா வருவாங்க.  இதுல சம்பாரிப்பது யாருன்னு பாத்தா, நம்ம இரண்டாவது ஆளு தான்.இடைத்தரகர் தான் அங்க வாங்கி இங்க விப்பார்,இவருக்கு ஒரு செல்போன் கொஞ்சம் நிதானமா பணம்,நிறைய தொடர்புகள்,இந்த மூனும் இருந்தா, சில ஆயிரங்களை பல லட்சமா கூட மாத்தமுடியும்.ஆனா காசில்லாமா வாய்பந்தல் போட்டா கானாமல் போயிடுவாங்க,நம்ம பங்குசந்தை வியாபாரம் மாதரி,அதிகம் ரிஸ்க்,அதிகம் லாபம். மூனு பேருல எதுக்கு இவனப்பத்தி மட்டுமே பாக்குறோம்னு உங்களுக்கு தோனல? எனக்கு தோனுதே, ஏன்னா? இவன் தான் நான் வாங்குற பொருளோட விற்பனைவிலையை தீர்மானிப்பவன்(பிராண்டட் ப்ராடக்ட் தவிர்த்து).காய்கறில இருந்து கடலைமிட்டாய் வரைக்கும் இதான் நிலைமை.
சரி இந்தியா மாதிரி மிக அதிக மக்கள் தொகை உள்ள நாட்டுல்ல படிக்காதவங்க வேலை பாக்க மிகப்பெரிய வெளியா இயங்குவது இந்த நுகர்வு சங்கிலிதான். இது இல்லாட்டி கண்டிப்பா வேலையில்லாதவங்க வரிசையில இன்னும் சில கோடி பேர் சேந்திருப்பாங்க. உதாரணத்துக்கு மூட்டை தூக்குபவர்,வண்டி ஓட்டுனர் அப்படி இப்படின்னு இந்த நுகர்வு சங்கிலிய இயக்குற வேலை பாக்குறவங்க மட்டுமே இந்திய மக்கள் தொகைல 3.3% அப்படின்னு ஒரு கணக்கு,கடை முதலாளி மற்றும் வேலையாட்கள் அந்த கணக்குல இல்ல, மொத்தமா  1.40 கோடி சிறு கடை வச்சிருக்க வியாபாரிகள் இருக்காங்கலாம்,இதுல வாரச்சந்தை,காய்கறிச்சந்தை ல 10/10 இடத்துல கடை நடத்துறவங்களை சேரக்கவில்லை, சரியா? அப்புறம் உங்க தெரு முக்குல இருக்க பெட்டி கடையும் சேர்க்கவில்லை,ஆக இதெல்லாம் சேத்து, ஒரு முதலாளிக்கு ரொம்ப  குறைஞ்சபட்சமா 3 வேலைக்காரங்க என்று கணக்கு போட்டா எவ்ளோ வருமோ அத்தனை பேர் வேலைபாக்குற வலைபின்னல் இது. இவுங்க அத்தனைபேருக்கும் ஆபத்து வரப்போகுதுன்னு ஜக்கமா வேண்டுமானா குறி சொல்லலாம்.நான் சொல்லமாட்டேன்.
இந்த நுகர்வு சங்கிலி தரத்துக்கு முக்கியத்துவம் தராம பணத்துக்கு முக்கியத்துவம் தந்து இயங்குறது. காசு நிறையா இருக்கிறவனுக்கு பலாக்காய், கொஞ்சமா இருக்குறவனுக்கு கலாக்காய். காய்கறி கடைக்கு காசு இருக்குறவன் காலையில போய் புதுசா,இளசா வாங்கிவர, காசில்லாதவன் சாயங்காலமா போய், உடைஞ்சது,காய்ஞ்சதுல நல்லதா பொருக்கி எடுத்து குறைவான விலைக்கு வாங்குவான். ஒரே பொருள்,ஒரே கடை, வேற வேற விலை,நேரத்திற்கேற்ப,பரிச்சயத்திற்கேற்ப.
சில்லரை வணிகம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
வியாபரத்தை இரண்டு வகை படுத்தலாம்(business concentrate on bottom of the pyramid, and those concentrating on top of the pyramid)அதாவது பிரமிட்டின் கீழ் தட்டை மையப்படுத்திய வியாபரம் மற்றும் மேல் தட்டை மையப்படுத்திய வியாபாரம். இதுல கீழ்தட்ட மைய படுத்தி வியாபாரம் செய்வது,பல மக்கள்,மிக பெரிய சந்தை என்ற அடிப்படையில் பணம் வந்துகிட்டேயிருக்கும், நட்டமாகும் வாய்ப்பு குறைவு.உதாரணத்துக்கு ஆல்டோ கார் மார்க்கெட் கூட பி.எம்.டபுள்யூ மார்க்கெட் ஒப்புமை மாதிரி. ஆல்டோ எப்போவுமே விக்கும்.அதேதான் இந்த சில்லரை வியாபரம்.பெரிய நிறுவனம்,நிறைய பணம், நுகர்வைத்தவிர மத்த எல்லாத்தையும் அவனே செய்ய முடியும்.கடன்கொடுக்க வங்கிகள் இருக்க,உலகளாவிய கட்டமைப்புகள் மூலமா பல வித தகவல் கிடைக்கிறதால் தொழில் நேர்த்தி,லாப மையப்படுத்தப்பட்ட நடைமுறை, வீணாகுவதை தவிர்க்க கூடிய கட்டமைப்பு.தற்சமயம் அவர்கள் விற்பனை மட்டுமே செய்ய வருவதால்,வாங்கி விற்பாங்க,அதுக்கான கட்டமைப்பு,வாகணம் அப்படின்னு சில பல தொழிலும் பெருகும். போக போக (strategical move) என்ற அடிப்படையில் உற்பத்திய கூட அவுங்களே செய்யலாம்.நிலத்தை வாங்கியோ/லீஸுக்கு எடுத்தோ/விவசாயிகிட்ட விதை உரம் எல்லாம் குடுத்து விளைவிக்க சொல்லியோ உறுபத்தி செய்யலாம்.தொழில் தொடங்க கடன் கொடுக்குற வங்கியே பொருள் வாங்க கடன் அட்டையும் தரதால யாருக்கும் நட்டமில்ல.நுகர்வோர்க்கு தரம்,விவசாயிக்கு விலை, கடைகாரனுக்கு லாபம்,நிறையபேருக்கு சீறுடை வேலை(uniformed job).
சரி.புரியுது.இப்ப என்ன பிரச்சனைன்னா .....கொஞ்சம் இருங்க...வாரேன்
-எடு சாட்டை

இரண்டாம் பாகம் - சில்லரை வணிகம் - உள்குத்துகள்

No comments:

Post a Comment