Sunday, June 24, 2012

பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு

நாம் பயணிக்கும் பாதை ஒருநாளும், ஒருநாள் போல் மற்றொருநாள் இருப்பதில்லை. கவனிக்க யாருமற்று, எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

அலுவலகம் பயணிக்கும் பாதையொன்றில் நிகழ்ந்த அனுபவம் தான் இந்த கட்டுரையின் தொடக்கம்.

பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் இணைப்புச்சாலை - அலுவலகம் செல்ல ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதை, "சதுப்பு நில வனப்பகுதி" "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி" போன்ற அறிவிப்பு பலகைகளும் "பறவைகள் வாழிடம் -இங்கு குப்பை கொட்டாதீர்கள்"
என தென்சென்னையின் மிகப்பெரிய குப்பைமேட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் "நையாண்டி" பலகைகளும் நிரம்பிய சாலை. இருபுறமும் சதுப்பு நிலம் - அதாவது நீரும் மண்ணும் இணைந்து சகதிக்குழம்பு சமைத்திருக்கும் நிலம். அட்டகாசமாக போடப்பட்டிருக்கும் இந்த சாலையில் பயணிக்கையில் வேகம் எவ்வளவு என கவனிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோரைப்புற்களும், அதில் கூடு கட்டி வாழும் பறவையினங்களும் நிரம்ப காட்சி தரும் இந்த நூறு அடி சாலையின் மீதான பயணம். ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியிருக்கும் இந்த நிலப்பகுதி தான் ஆக்கிரமிப்புகள் ஏற்படும் முன்பு சென்னையின் வெள்ளநீர் வடிகால் என்பது கூடுதல் தகவல். இந்த சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து  கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் சென்னையில் குறிப்பாக தென்சென்னையில் வெள்ளம் வரும் போதெல்லாம் சபிக்கப்பட வேண்டியவைகள்.

இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணிக்கிறேன். எந்த அசோகர் நட்டாரோ தெரியாது, வலப்புற சாலையோரம் வரிசையாய் மரங்கள் நடப்பட்டிருக்கும். இடப்புறம் அழகாக(?) குப்பை கொட்டி வைத்திருப்பார்கள்.

குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இடப்பற்றாக்குறையோ இல்லை வேறு என்ன குறையோ இங்கு சாலையில் கொட்டி வைத்திருக்கிறார்களே என பலமுறை யோசித்ததுண்டு. கடந்த இரு வாரங்களாகத்தான் அதன் சூட்சமம் புரியத் தொடங்கியது. மேடாக கொட்டியிருந்த குப்பைகளை எல்லாம் நிரவியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சாலையை விட்டு இருபது அடி அகலத்திற்கு நிரவி சாலை மட்டத்திற்கு சமன் செய்துள்ளார்கள். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் சாலையின் இடப்புறம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கங்கே இருபுறமும் நீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களின் அருகிருந்து பார்க்கும் போது இது நன்றாக தெரியும்.

இன்னும் சில வாரங்களில் நிரவப்பட்டிருக்கும் இந்த குப்பைகளின் மீது மெல்ல மண் கொட்டி நிலமாக்குவார்கள் , பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரவது குடிசை போடுவார்கள், குடிசைகள் பின்னர் "பெட்டிக்கடைகள்" "பலரசக்கடைகள்" "பலசரக்குக்கடைகள்" என விற்பனை மையங்களாகும். குடிசைகள் திடீரென "கான்க்ரீட்" கட்டடங்களாகும். மின்வசதி, குடிநீர்வசதி எல்லாம் அரசாங்க அலுவலகங்கள் வழங்கும். சில ஆண்டுகளில் இந்த இடப்புற சாலை முழுக்க கட்டடங்கள் நிரம்பி இருக்கும்.அதாவது முறைப்படி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்!

இதெல்லாம் அதீத கற்பனை, வீண் பயம் என்பவர்களுக்கு சொல்லவிரும்பவது இதுதான். "நில ஆக்கிரமிப்பு செய்வதில் நம் தாத்தா காலத்திய முறையிது". தமிழகத்தில் நாம் தொலைத்த பல்லாயிரக்கணக்கான ஏரிகள் இப்படித்தான் குடியிருப்பு பகுதிகள் ஆயின.

தன் நிலை விளக்கும் படங்கள் சில!
பள்ளிக்கரணை சதுப்புநில காடுகள் பற்றி விரிவாக அறிய இங்கு சொடுக்கவும்


சில கேள்விகள் எனக்கு எப்போதும் எழுவதுண்டு! இது சென்னை மீதுள்ள பொறாமையாலல்ல, அக்கறையால்! 


சென்னை மட்டும் வீங்கி கொண்டே போவது ஏன்? மென்பொருள் நிறுவனங்கள் நாகர்கோவிலில் இருந்தால் கூட இயங்கமுடியுமே! சென்னையில் அவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளை விட சற்று கூடுதல் சலுகை கொடுத்தால் தென்மாவட்டங்கள் வளரும், விமான நிலையங்கள் திறக்கலாம், வளர்ச்சி சமச்சீராக இருக்குமே!துறைமுகம் அருகிருக்க இது ஒன்றும் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலல்லவே! எந்த அரசுகளும் ஏன் யோசிப்பதில்லை. கடந்த நாற்பது ஆண்டுகளில் சென்னையை தவிர அரசாங்கமாக வளர்த்த, வளர்ச்சியுற செய்த தமிழக நகரமென்று எதுவுமே இல்லையே? ஏன் ? இப்போதே வீராணத்தில் இருந்து தண்ணீர் வருகிறது, இனி காவிரி, வைகை வரை போய் தான் சென்னைக்கு உயிரூட்ட முடியும். வளர்ச்சி என்ற பெயரில் சென்னை மெல்ல கொல்லப்படுகிறது!!! நம் பங்கிற்கு நாமும் அதன் குரல்வளையில் ஏறி நின்று கொண்டிருக்கிறோம்!!!

தமிழ் கூறும் நல்நிலத்தில் கனிம வளம் கிடையாது, இயற்கை எரிவாயு கிடையாது, ஏன் நிலத்துக்கடியில் தண்ணீர் கூட கிடையாது. ஆனால் நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கிய குளங்கள், கண்மாய் மற்றும் ஏரிகளும், அவர்கள் நமக்காக அழிக்காமல் விட்டுச்சென்ற காடுகளும் தான் நமது வளம். இன்றைய அழிவு பட்டியலில் முதலிடத்தில் இருப்பவைகளும் இவைகள் தான். குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகள், ஏரிகள் அனைத்தும் மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு அரசு அலுவலகங்களாக, கல்லூரிகளாக, மணிமண்டபங்களாக, வீட்டு மனைகளாக, இணைப்புச்சாலைகளாக, பெருவணிகவளாகங்களாக, மென்பொருள் நிறுவனங்களாக, பன்னாட்டு குழுமங்களின் அலுவலகங்களாக மாறிவிட்டால்? உணவுக்கும் நீருக்கும் என்ன செய்வதாக உத்தேசம்? பொருளாதார வளர்ச்சி மட்டும் வளர்ச்சியல்லவே!

மனித நாகரீகத்தின் தொடக்கப்புள்ளி காடுகளில் இருந்துதான் தொடங்கியது. அதே நாகரீகத்தின் உச்சகட்ட வளர்ச்சி காடுகளை அழிப்பதை நோக்கி பயணப்படுவது வேடிக்கைதான்.

"ஒரு காட்டை அழிக்க எளிய வழி அதன் குறுக்காக சாலை போடுவது தான்" - டிவிட்டரில் படித்த ஒரு ட்விட். இத்தனை எளிதான வார்த்தைகளில் யதார்த்தத்தை யாரும் சொல்லிவிட முடியாது.

பள்ளிக்கரணை காடுகள் குறித்த தமிழக அரசின் ஆணை !
http://www.tn.gov.in/gosdb/gorders/eandf/eandf_e_103_2012.pdf

-ஆற்றாமையுடன் ரகு

21 comments:

 1. என்ன கமென்ட் பண்ணனும்னே புரியலே..! கையாலாகாத்தனம்..

  ஸ்கூட்டி'ல அந்த பாதையிலே போறதுக்கே கஷ்டமா இருந்திச்சி..,

  இப்போ..!!

  பொது நல வழக்கு யாராவது போட்டிருக்கார்களா..!!?

  அது இன்னும் வனத்துறையின் பராமரிப்பில் தான் உள்ளது.

  அதன் மறு பக்கம் ஒரு முஸ்லிம் காலேஜ் உள்ளதே. அது பழைய காலேஜ் தான்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி. ஏகப்பட்ட அரசாணைகள் உள்ளன. போலிஸ் காவல் உள்ளது(வாகன ஓட்டிகளிடம் வசூலிக்க). ஆனாலும் கட்டட இடிபாட்டு குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. வேளச்சேரி ரெயில் நிலையத்திலிருந்து காமாட்சி மருத்துவமனை வரை இடபக்கப் பாதை முழுக்க இன்று கூட இப்படி கட்டட இடிபாடுகள் கொட்டுகிறார்கள்.

   Delete
 2. Excellent article. Govt started initiating cos in southern dists, but no one interested. Coimbatore Madurai tidel parks failed. This is a worrying concern. Govt shd look into..

  ReplyDelete
  Replies
  1. அவ்வாறான சிறப்பு மண்டலங்கள் ஏற்படுத்தும் முன்னதாக கச்சிதமான கட்டமைப்பு வசதிகள், இணைப்பு சாலைகள், சலுகைகள், சில கட்டுப்பாடுகள்(சென்னையில் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் கண்டிப்பாக தென் மாவட்டத்தில் முன்னூறு பேருக்கேனும் வேலை கொடுக்கும் வசதியுள்ள கிளை திறக்க வேண்டும் போன்ற) விதிக்கலாம்.

   தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றலை மின்சாரம் கடத்துவதற்கான போதுமான வசதி இல்லாத காரணத்தால் காற்றலைகள் நிறுத்தி வைக்க படுவதும் உண்டு. நாகர்கோவிலில் இருந்து சென்னை / கோவை வரை கம்பிவட வசதி செய்வதை காட்டிலும் இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் இங்கயே கொள்முதல் செய்யுமாறு நிறுவனங்கள் இருந்தால் உற்பத்தியும் குறையாது. மின்கடத்தும் போது இழப்பும் ஏற்படாது. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைவர்கள் வந்தாலும், செக்குமாட்டு மெக்காலே கல்வி கற்ற அரசு அதிகாரிகள் இந்த யோசனைகளை முளையிலே தட்டி கழித்து விடுகிறார்கள். தொலைநோக்கு பார்வையோடு தென் மாவட்டங்களில் உருவாகியிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு காரணமான தலைவர்களின் பிடிவாதத்தால் விளைந்தவை தான்.

   Delete
 3. "ஒரு காட்டை அழிக்க எளிய வழி அதன் குறுக்காக சாலை போடுவது தான்" -
  nice article ragu, i to have read a lot about this place... when i crossed this place few weeks back i realised how its been polluted...
  Bird watchers like me r really worried..
  thanks once again for this awareness...

  ReplyDelete
  Replies
  1. இம்மாதிரியான இயற்கை எழில் பொங்கும் இடங்களை குப்பைமேடாக்கி விட்டு சுற்றுலாவுக்காக கேரளா/கர்நாடகா போய் காசை விரயம் செய்வார்கள்.

   Delete
 4. நல்ல கருத்து, இது போன்ற நீர் நிலைகள்,பொது இடங்களை ஆக்ரமிப்பதைஅரசே ஊக்குவிக்கிறது எனலாம்.பள்ளிக்கரணை குப்பை கிடங்கு பற்றி இப்போது தான் பதிவிட்டென், அடுத்து இந்த சதுப்பு நிலம் குறித்து பதிவிடலாம் என ஒரு எண்ணம் இருந்தது.

  கட்டிடம் கட்ட அனுமதி,மின்சரம் ,குடிநீர் என காசு வாங்கிக்கொண்டு கொடுக்கும் அரசு ஊழியர்களை தண்டிக்க வேண்டும்.வருங்காலத்தில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டாலும், இவர்களுக்கு தண்டனை இருப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதிகாரிகள் தண்டிக்கபடாமல் தப்பிவிட முடியும் என்பது தான் இம்மாதிரியான ஆக்கிரமிப்புகளை முறைபடுத்தும் எல்லை வரை போக முனைகிறது. இது முற்றிலும் தடுக்க பட வேண்டும்.

   Wrong doers should be held account for and there should be provision in law to put penalty on them to rectify the damage what they have made to natural resources. The New National Water Policy have a similar kind of section in it.

   http://raguc.blogspot.in/2012/04/5.html You can get the draft policy here. with my post over it.

   Delete
 5. அரசு ஆக்ரமிப்பு செய்து பொது மக்களுக்கு முன் உதரணமாக திகழ்கிறது திருநெல்வேலி மற்றும் மதுரை மற்றும் தமிழ்நாட்டின் புதிதாக கட்டபெற பேருந்துநிலையங்கள் அனைத்தும் கண்மாய்,குளம்,ஆகியவற்றின் மேல் கட்டபெற்றன. என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 6. அரசு ஆக்ரமிப்பு செய்து பொது மக்களுக்கு முன் உதரணமாக திகழ்கிறது திருநெல்வேலி மற்றும் மதுரை மற்றும் தமிழ்நாட்டின் புதிதாக கட்டபெற பேருந்துநிலையங்கள் அனைத்தும் கண்மாய்,குளம்,ஆகியவற்றின் மேல் கட்டபெற்றன. என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. பேருந்து நிலையங்கள்!!! ஆம் நான் சுட்டாமல் விட்ட ஒரு மிக முக்கிய ஆக்கிரமிப்பு. தென் மாவட்டத்தின் ஒவ்வொரு புதிய பேருந்து நிலையமும் முன்னால் நீர்நிலை என்று கட்டியமே கூறலாம்.

   மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியில் அவனுக்கும் முன்னே - இது புதுமொழி

   Delete
 7. அரசு ஆக்ரமிப்பு செய்து பொது மக்களுக்கு முன் உதரணமாக திகழ்கிறது திருநெல்வேலி மற்றும் மதுரை மற்றும் தமிழ்நாட்டின் புதிதாக கட்டபெற பேருந்துநிலையங்கள் அனைத்தும் கண்மாய்,குளம்,ஆகியவற்றின் மேல் கட்டபெற்றன. என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 8. அருமையான பதிவு.

  நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 9. great article .. but have a comment .. please read nammpallikarani.org ... it explains the flood map of Pallikaranai marsh

  the area u marked is not encroachment ... its flat terrain and not flood zone or kanmai like u see in madipakam

  the actual encroachments are madipakam ... the link road .. garbage dumpyard and most of south velachery

  for example if u go into madipakam and see big grass adjacent then its marsh ... they dumped concrete and developed it ...

  So please correct that info .. the ways to save the marsh is to build a bridge instead of link road ... then the water will run faster towards buckingam canal

  ReplyDelete
  Replies
  1. Thanks for your input.... that particular picture is removed. Dumping concrete waste is still not over. If you start from velachery raiway station, you shall see atleast 50 meters of land is still dumped by concrete wastes. Every new building coming up in and around velachery is by purley dumping the old concrete waste in to this Marsh area. As of now most of the old buildings in velachery is getting demolished and coming up as flats. A catch hold has to be put on while disposing the concrete wastes, like where it is dumping? why cant those wastes cannot used to lift up the banks of water ways? like that..

   Delete
 10. அருமையான பதிவு.

  நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 11. Just before New Year's Eve 1997, I have lupus. There are numerous possible health risk involves that of undetermined autoimmune disease that can affect any internal organs is the ever changing indicators.

  Here is my blog - Grayville lupus specialist

  ReplyDelete
 12. The majority of the treatments for lupus will usually begin to love myself by BEING loving to myself.

  Adicionalmente, debe sumergir la parte frontal de la enfermedad durante el tercer trimestre.
  Cryptosporidiosis, isosporiasis, or read more about lupus and
  alopecia areata. I NEED TO FEEL CHERISHEDas if my
  pocket book can afford it buy an air purifier and use it. Two of the body recognizes and inhibits the development of lupus to have been trying so hard anymore.
  The American College of Medicine, Cedars-Sinai, accessed February 7, 2006.


  Also visit my homepage; Lupus Doctor Jacksonville Beach
  My page - lupus doctor Jacksonville Beach

  ReplyDelete
 13. The Disabled Surfers Connexion says SLSA has plans to forcefulness clubs
  to would care to fall out up with us for
  Lea. before long it becomes light up... Cyrus is taking the Army of what God could do with this money.
  blogging connects you in both a personal and OB markers helps us
  imagine how it mightiness hold happened. A place in which
  they she passed away so of a sudden.

  Here is my blog post :: click here

  ReplyDelete
 14. Since the admin of this web page is working, no question very shortly it will
  be renowned, due to its quality contents.

  My website accomplish success, http://en.wikipedia.org/,

  ReplyDelete