Thursday, October 11, 2012

கூடங்குளம் - Brainstorming with @writercsk

சரவகார்த்திகேயன் அவர்கள் டிவிட்டரில் பகிர்ந்த "கூடங்குளம்" பற்றிய  உறலி ஒன்றிற்கு விளக்கம் கேட்டு நான் எழுதிய டிவிட்லாங்கரை பெரிதும் மதித்து நேரம் ஒதுக்கி, தன் வலைபக்கத்தில் ஒரு பக்கம் ஒதுக்கி எனக்கு பதில் தந்திருந்தார். 

மிக்க நன்றிகள் ரைட்டரே. உங்கள் பதிவுக்கான என் பதில் பதிவு இது.

//நன்றி, ரகு. முதலில் ட்விட்டரில் இருக்கும் உங்கள் விளையாட்டுத்தனமான பிம்பத்தை உடைப்பது போல் இவ்வளவு விரிவாய்க் கேள்விகள் கேட்டதற்கு kudos. இதைப் பற்றி எழுத எனக்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்தமைக்கு வந்தனம். //

டிவிட்டரில் நிறைய பேர் எனக்கு சீரியஸ் ஆசாமி முத்திரை குத்தியிருக்கிறார்கள். நல்லவேளையாக என் பிம்பம் உடைத்தீர்கள். மிக்க நன்றிகள்.

//இந்தக் கட்டுரை நடுநிலை பேசவில்லை.  அப்படிப் பேசுவதாக claim செய்யவுமில்லை. விஞ்ஞானம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு சமூக பிரச்சனை பற்றி ஒரு விஞ்ஞானி தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவே. இரு தரப்புக்கும் பாயிண்ட்ஸ் சொல்கிறார் என்று நாமாக நடுநிலைமை என்று முத்திரை குத்தலாகாது. வேண்டும், வேண்டாம் என்று இரு தரப்புகள் இருப்பது போல் சில விஷயங்களை ஒழுக்கமாகச் செய்தால் கொண்டு வரலாம் என்று சொல்லும் மற்றுமொரு தரப்பு இது.  என் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதே தான். நடுநிலைமை என அழைக்க வேண்டாம் இதை.//


இதை நீங்கள் கட்டுரை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறீர்கள். இது பதிப்பிக்க பட்டிருக்கும் நாளிதழ், அதன் வாசகர் வட்டம், அந்த நாளிதழின் "இந்த பிரச்சனை சார் நிலை" போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்வதால் இந்த கட்டுரையின் நோக்கத்தை யாம் வேறொரு கோணத்தில் புரிந்து கொள்கிறோம். அவ்வளவே. 

//அடிப்படையில் அணு உலைகளை எதிர்த்தவர் என்பது போதுமே! தீவிரமாக எதிர்த்தவராகவே இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் - சரியான தர்க்கங்களை முன்வைத்தாலும் கண்மூடித்தனமாக அதை எதிர்க்க வேண்டும் என்றா? தேவை இல்லையே. என் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் ஒற்றை வரியில் என்ன பதில் சொல்வேன்? அணுசக்தியை ஆதரிக்கிறேன் என்று தானே! ஆனால் அதைத் தான்டிய ifs and buts இருக்கத் தானே செய்கின்றன. எல்லாத் தரப்பையும் விரிவாக‌ உள்வாங்கிக் கொண்டு மிக நிதானமாக முடிவெடுப்பவரின் முடிவு ஒருபோதும் binaryஆக இருக்க முடியாது. மோன்பியாட்டின் ஆரம்ப அணு உலை conditional எதிர்ப்பு நிலைப்பாட்டை அப்படிப்பட்டதெனக் கொள்ளலாம். //


//அப்படிப் பார்த்தால் எந்த வாதத்திலும் expert opinionஐ துணைக்கு அழைக்க‌ முடியாது. கட்டாயம் அதற்கு வேறொரு expert நேர்மாறான opinion சொல்லி இருப்பார். ராகுல் இதில் முக்கியமாய் சுட்டிக் காட்ட விரும்பும் விஷயம்  என்னவென்றால் தர்க்கப்பூர்வமாய் அணு உலைகளை எதிர்த்த ஓர் ஆசாமி இப்போது மனம் மாறி இருக்கிறார் என்பதையே. உதாரணமாய் கிருபானந்த  வாரியர் திடீரென‌ ஒருநாள் ஒரு வலுவான ஆதாரத்தைக் காட்டி நாத்திகம் பேச ஆரம்பித்திருந்தால் கடவுள் இல்லை என நம்பிக் கொண்டிருப்பவன் அதை முக்கிய விஷயமாய் எடுத்துப் பேசுவான் அல்லவா, அது போலத் தான்! //

அடிப்படையில் போதிய ஆய்வு செய்திடாமல் இதை எதிர்த்தவர்,சமீப நிகழ்வுகளுக்கு பிறகு தன் நிலையை மாற்றி கொண்டிருக்கிறார். இப்போதும் தரவுகளுக்கு பிறகு அல்ல, நிகழ்வுக்கு பிறகு. கொஞ்சம் யோசித்து பார்த்தால் ஒருவேளை புகுசிமாவின் விதி வேறுமாதிரி எழுதப்பட்டிருந்தால் "மோன்பியாட்" வேறு மாதிரி தான் முடிவெடுத்திருப்பார். இந்த சந்தர்ப்பவாதத்தை மறுக்கவியலாது என்கிற வாய்ப்பைத்தான் சுட்டிக்காட்டி இருந்தேன். He is not "convinced because of the fact", he just started to believe. நீங்களே சொன்னது போல "நம்பிக்கொண்டிருப்பவன் எடுத்து பேசுவான்" - நம்பிக்கை வேறு, தரவுகள் மூலம் வரும் புரிதல் வேறு. விஞ்ஞானம் என்பது நம்பிக்கையல்ல, மாறாக அதற்கு எதிர்வாதம் செய்து உண்மையை கண்டறிவதே.

//ஒப்புக் கொள்கிறேன். ராகுலுக்கும் அது தெரியும். ஆனால் தர்க்கரீதியாக ஒரு விபத்தை எப்படி தடுக்க முயற்சிப்போம்? முன்பு நடந்த விபத்துக்களை எல்லாம் அலசி என்ன தவறு செய்திருக்கிறோம் என ஆராய்ந்து மேலும் என்னென்ன தவற வாய்ப்புண்டு என நீட்டித்து அவற்றை எல்லாம் திறமையாகக் கையாளும் வழிவகைகளைத் துல்லியமாகப் பின்பற்ற முயல்வோம். அதைத் தான் செய்யச் சொல்கிறார் ராகுல். ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு மாதிரி அதனால் இப்படி ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதே வீண் என்று சொல்ல முடியுமா? மனிதனுக்குச் சவால் விடும் எதையும் மனிதன் விட்டு வைப்பதில்லை; பயந்து ஒதுங்கியதில்லை. விஞ்ஞானத்தின் துணையுடன் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்வதே மனிதகுல வரலாறு. அணு உலைகளின் பாதுகாப்பிலும் அதுவே நிகழும். நீங்களே யோசித்துப் பாருங்கள் நீர் என்பது ஒரு ஸ்லோ பாய்சன்; அதை அருந்துவதால் தான் மனித இனமே இவ்வளவு காலமாக இறந்து கொண்டிருந்தது என ஒரு நாள் விஞ்ஞானரீதியாகக் கண்டு பிடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்காக என்ன செய்வது? இத்தனை ஆண்டு சரித்திரம் + இன்றைய விஞ்ஞானத்தின் படி நீர் பாதுகாப்பானது. அதை அப்படியே நம்புகிறோம் அல்லவா? அது போல் இன்றைய விஞ்ஞானம் சொல்லும் அணு உலை பாதுகாப்பையும் நம்பித் தான் ஆக வேண்டும். //

இந்த பத்தியில் உங்கள் வாதத்தோடு முழுக்க உடன்படுகிறேன் என்றாலும், இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் கூடங்குளம் உலைக்கும் நீங்கள் குறிப்பிடும் இந்த பொதுவான துறைசார் வளர்ச்சிக்கும் (பாதுகாப்பு முறைமைகள்) வேறுபாடு உள்ளது. இந்த உலை வடிவமைக்கப்பட்ட ஆண்டு,அப்போது இருந்த பாதுகாப்பு முறைமைகள், தற்கால மேம்படுத்தல்கள் போன்ற தகவல்கள் அதிகம் அறியக்கிடைக்கும் பொது இன்னும் விரிவாக விவாதிக்க முடியும். எனக்கு தெரிந்த அளவில் இந்த உலையின் பாதுகாப்பு விதிமுறைகள் / திட்டமிடல்கள் AT PAR TO CURRENT GUIDELINES அல்ல என்பதே. 


//என்றுமே விஞ்ஞானத்தில் fail-safe மட்டும் தான் சாத்தியம். அது தான் யதார்த்தமும் கூட. Fool-proof என்ப‌து ஓர் அற்புதம், ஒரு கனவு, ஒரு ஹீரோயிஸம் மட்டுமே. அதை விஞ்ஞானம் ஒரு போதும் தருவதில்லை. சிக்ஸ் சிக்மா (99.99966%) தான் பேசுகிறது, 100% எப்போதாவது பேசி இருக்கிறதா அறிவியல்? இது வரை கண்டிடாத புதுவகை இயற்கை சீற்றம் உலையை அழிக்கலாம் தான். நமக்குத் தெரியாததை நாம் கற்பனை செய்ய முடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த அசம்பாவித‌ங்கள் நடந்தால் எந்த ஆபத்தும் நேராது இருக்குமளவு பாதுகாப்பு கொடுக்க முடியும். நாமும் அதைத் தான் கேட்க வேண்டும். //

FOOL PROOF என்பதை ஒட்டுமொத்த விஞ்ஞானத்துக்கு என எடுத்துக்கொள்ளாமல் தனித்தனி செயல்களுக்கு / செயல்பாடுகளுக்கு என எடுத்துக்கொண்டால் இது சாத்தியமே. பல இடங்களில் இப்போது நடைமுறையில் உள்ளது. உதரணமாக "ஹைட்ராலிக்" துறையில் FOOL PROOF என்பது சாதாரணம்.  இது ஹீரோயிசம் கிடையாது. For Example : An "(Hydraulic)Fuse" is a fail safe device, but its an Fool Proof Mechanism. 

Six Sigma என்பது ஒரு செயல்பாட்டு முறை. அது 99.99966% சதவிகதம் தான் பேசுகிறது ஏனென்றால் 100 % என்று அது சொல்ல இயலாது.. காரணம் அந்த செயல்பாட்டு கணக்கீடுகளில் ஒளிந்திருக்கும் "ஊக மதிப்புகள்"(Assumption Values). 

நமக்கு தெரிந்த சம்பவங்கள் நிகழ்ந்தால் பாதுகாப்பு தரும் அம்சம் பற்றித்தான் இப்போதும் கேட்கப்படுகிறது. 42.5 ரிக்டர் பூகம்பத்தை தாங்குமா என்றோ 170 அடி சுனாமியை தாங்குமா என்றோ யாரும் கேட்கவில்லை.

நடைமுறை படுத்தப்பட்டிருக்கும் முறைமைகளின் நம்பகத்தன்மை குறித்தும், அது நடைமுறைபடுத்தப்படும் முறை குறித்தும் தான் கேள்வி எழுகிறது. விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள் என்பதோடு இதை எளிதாக முடித்துவிட முடியாது. நூறு அடியில் தண்ணீர் தரும் என் வீட்டு கிணற்றுக்கு அருகே பெருநிருவனமொன்றின் குளிர்பான ஆலை அமைக்கப்படும்போது, நாளை மறுநாள் என் கிணற்றில் தண்ணீர் இருக்குமா என நான் கவலை கொள்வது நியாயம் தானே ? 

//அதைப் பற்றி இக்கட்டுரையில் ராகுல் வாய் திறக்கவில்லை. போலவே அணு உலையின் இதர பாதுகாப்புகள் குறித்தும் குறிப்பாய் ஏதும் சொல்லவில்லையே. என் புரிதலின் படி அவை எல்லாவற்றுக்குமே அவர் பதிலாய் NSRAஐத் தான் சொல்கிறார். அது மட்டும் சுதந்திரமாக சரியாக இயங்கும் படி சட்டங்கள் வந்தால் அணு உலைகள் தாமாய் முழு பாதுகாப்பு பெறும் என்கிறார். அணுக்கழிவுகளைக் கையாள்வதும் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு இயங்கும் அணு உலைகளின் கழிவுகளை deep geological repositoryயில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். அதாவது கொஞ்ச காலம் உலையிலேயே வைத்துப் பாதுகாத்து விட்டுப் பின் பூமிக்கு அடியில் ஆழமாய்க் குழி தோண்டி அங்கே கொண்டு போய் அணுக்கழிவுகளை வைத்து விடுவது. கல்பாக்கத்தில் கூட இப்படிக் குழி தோண்டிப் புதைக்கப்படுவதாக‌க் கேள்விப்பட்டிருக்கிறேன். கூடங்குளத்துக்கும் வழி செய்வார்கள்! //

NSRA என்பது தான் கனவு, உங்கள் மொழியியல் படி ஹீரோயிசம். அதற்கான ஆரம்ப முஸ்தீபுகள் கூட ஒழுங்கு செய்யப்படவில்லை. அணு உலையின் அணுக்கழிவு தான் ஆயுத பயன்பாட்டுக்கான  அணு மூலப்பொருள் என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். இந்திய அரசாங்கத்தின் மௌனம் அர்த்தபடுவது இங்குதான். இந்த தேசத்தில் "Quality Auditing " என்பது கண்துடைப்புக்காக கூட இல்லை என்பது தான் கவலைகளை அதிகரிக்கிறது.  

// சரியாய்ச் சொன்னால் டோக்கியோவுக்கும் ஃபுக்குஷிமாவுக்கும் இடையேயான தூரம் 238.34 கிலோமீட்டர்கள். 40 microsieverts என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது. எங்கிருந்து வந்தது இந்த 4000msevs என்ற மேஜிக் நம்பர்? //
//ஆமாம், நீங்கள் சொல்வது போல் தூரம் பொறுத்து கதிர்வீச்சின் அளவு மாறும். டோக்கியோ என அவர் சொன்னது ஓர் உதாரணத்திற்காக. கூடன்குளம் அணு உலையினால் தனக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என கோவையில் வசிக்கும் ஒரு பெண் கவலைப்பட்டால் அவருக்கான பதில் அது என வைத்துக் கொள்ளலாம். ஆனால் ராகுல் அடுத்த வரியிலேயே அமெரிக்காவின் ஆக மோசமான அணு உலை விபத்தான த்ரீ மைல் ஐலேண்ட் பகுதியிலேயே ஒருவர் இருந்திருந்தால் பெறக்கூடிய கதிர்வீச்சு பற்றியும் சொல்கிறாரே. அது தான் கூடங்குளம் மக்களுக்குத் தொடர்புடையது. //
//http://www.abdulkalam.com/kalam/jsp/display_content_front.jsp?menuid=28&menuname=Speeches%20/%20Lectures&linkid=68&linkname=Recent&content=1945&columnno=0&starts=0&menu_image=- - அணு உலையின் தற்போதைய பாதுகாப்பு குறித்து அப்துல் கலாம் ஆராய்ந்து அளித்த அறிக்கை இது. பல கோணங்களில் உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இது விரிவாய்ப் பேசுகிறது. ஆனால் ராகுலின் கூற்றுப்படி கூடங்குளத்தில் இவற்றை விட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பது புரிகிறது. இதற்கு பொறுப்பான சர்வதேச அமைப்பான IAEA அணுக் கச்சாப் பொருட்கள் மற்றும் அணுக் கழிவுப் பொருட்களைக் கொண்டு இந்தியா அணு ஆயுதம் செய்து விடாமல் மட்டுமே பார்த்துக் கொள்கிறது, மற்றபடி அணு உலையின் பாதுகாப்பு குறித்து அதற்கு அக்கறை இல்லை. இது சம்மந்தப்பட்ட இந்திய அமைப்பான AERB அரசாங்கக் கைப்பாவையாக இருக்கிறது. அரசின் முடிவே இந்த அமைப்பு ஓர் அணு உலைக்கு அளிக்கும் சான்றிதழில் இருக்கும். அதனால் சுதந்திரமும் தெளிவும் நிரம்பிய NSRAவைக் கொண்டு வருவது தான் ஒரே தீர்வு என்கிறார்.//
//எந்த தேசமும் அணு உலை அருகே வசிக்கும் தன் மக்களுக்கு இந்த வாக்குறுதி எல்லாம் தருகிறதா எனத் தெரிந்திலை. அவர்கள் எல்லோரும் உத்தரவாதம் தருவது ஒரே விஷயம் தான். அது அணு உலையின் பாதுகாப்பு. கூடங்குளத்திலும் அதைக் கேட்பதே நியாயம். நிஜமான NSRA வந்தால் அதை உறுதிப்படுத்தும் என்பது ராகுலின் நம்பிக்கை. //

எப்படி தான் இவ்வளவு சரியாக தூரத்தை கண்டுபிடித்தீர்களோ? உங்கள் கட்டுரையில் வாதத்தை/சமாதானத்தை/விளக்கத்தை தாண்டி அங்கங்கு இவ்வாறு தென்படும் தரவுகள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். 

கலாம் அவர்களின் கட்டுரை படித்தேன். மன்னிக்க, அந்த கட்டுரையை படிக்கும் ஒருவன் அணுஉலையை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட விதம் சற்று எரிச்சலே. என்றாலும் அதிலிருக்கும் தரவுகள் எனக்கு புதியவை. கொஞ்சம் எனது கருதுகோளை மீளாய்வு செய்ய வேண்டும். தரவுக்கு நன்றிகள்.

//அப்படி அனைத்தையும் தெளிவுபடுத்திய பின்பே அணு உலையை செயல்படுத்த‌ வேண்டும் என்பதே என் விருப்பமும்.//

Kudos..

//இல்லை. ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. அந்தப் பெண்ணுடையதைப் போல் உணர்ச்சியின் மேலீட்டால் நிகழ்த்தப்பட்ட மேலோட்டமான ஒப்புமையாக இல்லாமல் ராகுலின் விமானம் - அணு உலை ஒப்பீடு கனகச்சிதம். அதாவது நாம் விமானப் பயணத்திற்கே மிகப் பயந்தோம். அதனால் அதன் பாதுகாப்புகள் காலந்தோறும் வலுவடைந்து இப்போது என்ன நிலைமை ஆகி விட்டதென்றால் பைக், கார், பஸ், ரயில், கப்பல் என வேறெந்த மார்க்கமாய்ப் பயணம் செய்வதைக் காட்டிலும் விமானத்தில் பயணிப்பதே மிகப் பாதுகாப்பானதாக ஆகி விட்டது. நடக்கும் விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிகையை ஒப்பிட்டு இதை அடித்துச் சொல்லலாம். அது போல செர்னோபில் என்ற மாபெரும் தோல்விக்குப் பின் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்து இன்று அணு உலைகளும் பாதுகாப்பின் உச்சத்தில் இருக்கின்றன‌. மோன்பியாட் மனம் மாறியதன் காரணமே இந்த அபாரமான பாதுகாப்பு தானே! இந்திய அணு உலைகளில் இத்தகைய பாதுகாப்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. ஆனால் NSRA மூலம் கொண்டு வந்து விடலாம் என்கிறார் ராகுல்.//

என்னிடம் இந்த கேள்விக்கு விடை கிடைத்தபின் நிச்சயம் நானும் உங்கள் சாரியில் நிற்கக்கூடும். NSRA - நம்பிக்கை தானே எல்லாம், நம்புவோம். 

No comments:

Post a Comment